உன் கவிதை என்ன சாதி
பாக்களை யாக்கும்
கவிஞ
பூக்களில் உன்கவிதை
என்ன சாதி
மல்லிகையா முல்லையா
என்று கேட்டாள் தோழி !
மல்லிகை குழலில் சூடி
முல்லையை இதழில் சூடும்
சிநேகிதி !
மலர் சூடும்
மங்கையர் சாதியுமில்லை
சிங்கம் வேங்கை களிறு
என்று சொல்லித் திரியும்
ஆண் சாதியுமில்லை
மக்களை சமூகத்தை மனிதத்தைப்
போற்றும் மானுட சாதி என் கவிதை !
----கவின் சாரலன்