பெண்ணே எறிதனலை எடுத்துவா
பரந்து விரிந்த
புவிக்கு
அவள் நாமம்!
கரைபுரண்டு ஓடும்
நதிகளுக்கும்
அவள் பெயர்!
அன்பு, பாசம், கருணையின்
மொத்த உருவம்
அவள்!
அன்பான தேவதையை
அலங்கோலபடுத்தும்
சிலர்!
மகிழ்ச்சியாய் சாலையில்
அவள்
நிகழப்போவதை அறியாமல்!
அனைவரும் எனது சகோதரி
என்று உறுதிமொழி எடுப்பவன்
கற்பழிக்கிறான்!
குருதியை அவளிடம் கண்டவன்
திருப்தியடைகிறான்
பின்விளைவுகளைப்பற்றி அறியாமல்!
அனாதையாய் அலங்கோலமாய்
சாலையோரத்தில்
அவள் உடல்!
வாழ்க்கையின் இறுதி கட்டத்தில்
பாசமான தாய் தந்தையர்
மனக்கண்முன் வர,
நிறைவேறாத ஆசைகள்
ஆசையாய்
அழைக்க,
இறப்புக்கும் அவளுக்கும்
நடுவே
போராட்டம்!
இறுதியில் யமதர்மன்
அவளை
வென்றுவிட,
அமைதியாய்
உறங்கும்
தன் உடலை
துடிதுடித்து
பார்க்கிறது
அவள் ஆன்மா!
இதில் அஞ்சி நடுங்கி
முடங்கிப்போனவர்கள்
பலர்!
இழந்துவிட்டோம் பல
கவிஞர்களையும், ஆசிரியர்களையும்,
தலைவிகளையும்!
நாம் முடங்கிக்கிடந்த
காலம்
மலையேறிவிட்டது!
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டும்
பறந்து வா!
தாமதம் செய்யாதே
விரைந்து
எழு!
தகர்த்தெறி
உன் முன்னேற்றத்திற்கு
தடைகள் வந்தால்!
உறங்கிக் கிடந்தால்
விடியல்
உன் வசமில்ல!
முடங்கிக்கிடந்தால்
பட்டுபுழு
பட்டாம்பூச்சி ஆவதில்லை!
வாழ்ந்து காட்டு!
அன்பு செலுத்துவதில்
அன்னை தெரசாவாக!
சாதனை
புரிவதில்
கல்பனா சாவ்லாவாக!
ஆளுமை
செய்வதில்
இந்திரா காந்தியாக!
பண்புடன்
வாழ்வதில்
வீரத்தமிழச்சியாக!!!
விழித்தெழு பெண்ணே,
விழித்தெழு!
புயலாய் மாறு!!!