இதயம் பேசியது
காதலியிடம் நடிக்கும் காதலன்,
காதலனிடம் நடிக்கும் காதலி,
கணவனிடம் நடிக்கும் மனைவி,
மனைவியிடம் நடிக்கும் கணவன்,
பெற்றோரிடம் நடிக்கும் பிள்ளைகள்,
பிள்ளைகளிடம் நடிக்கும் பெற்றோர்,
ஆசிரியரிடம் நடிக்கும் மாணவன்,
மாணவனிடம் நடிக்கும் ஆசிரியர்,
முதலாளியிடம் நடிக்கும் தொழிலாளி,
தொழிலாளியிடம் நடிக்கும் முதலாளி,
மக்களிடம் நடிக்கும் அரசியல்வாதி,
அரசியல்வாதியிடம் நடிக்கும் மக்கள்,
என்றே எங்கும் எதிலும் நடிப்பே அரங்கேறுகிறது உலகமென்னும் நாடகமேடையிலே....
சினிமாவிலே சிறந்த தாயாக நடித்தவரின் குழந்தை நிஜத்தில் வளர்கிறது வீட்டு ஆயாவிடம்....
சினிமாவிலே கணவனை பிரிந்துவந்த தனது மகளுக்கு அறிவுரை வழங்கி அவள் கணவனோடு சேர்ந்துவாழ வைத்தவர் நிஜத்தில் பிரித்து வந்த தன் மகளுக்காக விண்ணப்பிக்கிறார் விவாகரத்து நீதி மன்றத்திலே...
கலையென்பதென்ன பொழுதுபோக்கா??...
அது தானே வாழ்க்கை...
அன்பாய் இருப்பதைப் போல் நடிப்பதைவிட, உண்மையாய் வெறுத்து ஒதுங்கிவிடுவதே மேலென்று தோன்றுகையிலே,
யாவும் நடப்பது இந்த இதயத் துடிப்பாலே,
இந்த இதயத் துடிப்பே பொய்யானால் என்ன செய்வாய் அன்பே??..
என்றே அறிவு கேட்க, இறந்து போகிறேனென்று வெறுப்போடு சொன்னது இந்த இதயம்...