வாசலிலே கோலமிட்டு வளமாக வாழ்ந்திருந்தோம் --- கிராமியக் கவிதை

வாசலிலே கோலமிட்டு வளமாக வாழ்ந்திருந்தோம் --- கிராமியக் கவிதை


வாசலிலே கோலமிட்டு
வளமாக வாழ்ந்திருந்தோம் .
மண் குடிசை வீட்டினிலே
பாய் விரித்துப் படுத்தோமே !
மாட்டு சாணம் கொண்டே
வீடு மொழுகி கொடைக்கு
ஏத்த குளிர்ச்சியான
மகிழ்ச்சியிலே வாழ்ந்தோமே !


அரிசி மாவில் கோலம் போட
அழகழகா பொண்டுகளும்
வாசலிலே விடியல் காலை
வரிசையாக நின்ன படி
வாசலிலே கோலம் போடும்
எழிலான காட்சியிலே
மன்மதனும் மயங்கிடுவான் !
மாமன் நான் என் சொல்ல !!!


கோலத்தில பூச்சிகளும்
எறும்புகளும் ஊர்ந்து ஊர்ந்து
அரிசி மாவையுமே உணவாகத்
தின்னுகின்ற அழகினிலே
விருந்தோம்பல் மரபினையே
விரைந்து நாமும் கற்றிடுவோம் !!


பாட்டியுடன் சேர்ந்து கொண்டு
தாத்தாவும் ரசிக்கும் காட்சி
இல்லறத்தின் இன்பநிலை
இது தானே சான்றாகும் .
குனிந்து நிமிர்ந்து கோலமிடும்
வயதான மூதாட்டி வளர்பிறையாய்
கண்களுக்குத் தெரிகின்றாள் .
நம் மனம் முழுதும் இன்ப வெள்ளம் !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Apr-17, 9:01 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 71

மேலே