கஞ்சிக்கலயம் சுமந்து போறவளே --- கிராமியக் கவிதை

கஞ்சிக்கலயம் சுமந்து போறவளே !! --- கிராமியக் கவிதை


கஞ்சிக்கலயம் சுமந்து போறவளே !
காத்து நில்லு நானும் வாரேன் !
கொஞ்சிப்பேசும் கொண்டைக்காரி !
கொல்லாதடி உன் ஓரக் கண்ணால !


ஒத்தையில போவாதடி !
அத்த மகன் நானும் வாரேன் !
நித்தம் நித்தம் நெஞ்சக் கிள்ளாதடி !
பித்தும் பிடிச்சு நிக்கிறேனடி !


பழைய சோறும் வெங்காயமும்
பாதகத்தி நீ ஊட்டி விட்டா
அமுதம் போல இனிக்குமடி !
அன்பான என் ராசாத்தி !!


பஞ்சு மிட்டாய் வாங்கித் தாரேன் !
பாதிக்கடிச்சு நீயும் தாடி !
வஞ்சி உன்னைக் கொஞ்சுதற்கு
வாட்டமான ஆளு தான்டி !!!


செக்கச் செவந்தவளே !
சிங்கார மேனியளே !
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அணைச்சுக்கலாம் வாடி புள்ள !!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Apr-17, 12:29 pm)
பார்வை : 114

மேலே