என் கனவு தேவதை

தொடுதிரை துரிகையாய், மேக
துள்ளல் ஆட்டம்!
துனண தேடும் ஆண் மீனாய்
சிறு மின்னல் ஓட்டம்!
மழை தூவும் வீண்மீனாய்
ஒரு பொம்மலாட்டம்!
நிழல் தேடும் நித்திரையில் சிறு முலிகை தோட்டம்!
மொத்த வானமும் மேத்தை
விரித்த விழா கூட்டம்!
நித்திரை நிலவொளி கடத்தும்
பெண் மான் கூட்டம்!
அவை நடுவே பொன் மானாய்
என்னவளின் தோற்றும்!
கவின் மலர் கண் எடுத்து
கார்மேக கூந்தல் இழுத்து
பொன் நகையிட்ட புன்னகையுடன்
இடை சிறுத்த நடையுடன்
மணமாலையிட்ட மணமகளாய்
என்னை நோக்கி வந்தால்!
என் கனவு தேவதை......