என் வந்தேமாதரம் ஒலிக்கும் காலை…
வானம் நீர் தெளிக்க
வெண் நாரைகள் கோலமிட
மீன்களாய் உன் கண்கள் பார்த்திருக்க
கொக்காய் காத்திருக்கிறேன் நான்….
மென்காற்று தொட்டெழுப்ப
இளம் பனி ஊடுருவ –விழிதிறந்தால்
வெளியில் நீ
உன் மலர்பாதம் புல் தழுவ…
பரதமிடும் என் மனது…
ஒவ்வொன்றாய் பறிக்கிறாய்
பூக்களுக்கும் ஆசை
உன் கரம் தழுவ…
சாமி காத்திருக்கிறது
உன் தரிசனத்திற்காக….
மெல்ல சிவக்கும் கீழ் வானம்
பறவைகள் கீரீச்சிட்டு கிளம்ப
மரங்கள் இலையசைக்க
காற்று ஒவ்வொன்றாய் தொட்டு
உன்னையும் கடந்து
என்னைத்தொடுகையில்….
காலையாகவே
இருந்துவிடக்கூடாதா
என் பொழுதுகள்?…