காதலியே அத்துணை அழகையும் எப்படி தான் அள்ளிச்சுமக்கிறாயோ
காணாமல் போனதே..!
காளை மனது..!!
களவாடிப் போனதோ ?!
கன்னி விழிகள்!!
பகன்றை பூ சிரிப்பால்
பாழாகி போனேனே...
உதட்டுச் சிவப்பா!
இல்லை..
தாமரைப்பூ விரிப்பா?!!
செங்காந்தள் மலராக
மருதானி விரல் மீது
வீற்றிருக்க...!
அல்லி மலர் மேனியாள்!
மானின் நிறத்தவளாம்!!
உள் மூச்சு நீ வாங்க!
மோக முள்ளோ என்னை குத்த!!
மேடு பள்ள வளைவுகளில்
ஏற்படும்
நிலச்சரிவால்
நிலை தடுமாறுமே
என் உள்ளம்!!
என் அணுவை பிளந்தாலும்
அழகாய் நீ தெரிவாய்!!
அத்துணை அழகையும்!
எப்படித்தான் அள்ளிச்சுமக்கிறாயோ..?!!