நீ தரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்

இனிய நினைவுகளை நீ தந்தாய்
இதயம் ஏற்றுக்கொண்டது !

இனிய கனவுகள் தந்தாய்
இதயம் ஏற்றுக்கொண்டது !

மௌனம் எனும் வாளால்
இதயம் குத்தி கிழித்தாய் அதையும்
இதயம் ஏற்றுக்கொண்டது !

பிரிவு எனும் மரணம் தந்தாய்
அதையும் பெற்று உயிர் பிரிந்தது

எஞ்சி இருப்பது வெற்று உடல்தான் இருக்கிறது
அது வேண்டுமா உனக்கு
சாம்பலாக்கிக்கொள்கிறாயா !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (12-Apr-17, 7:44 pm)
பார்வை : 345

மேலே