எவனோ ஒருவன் வாசிக்கிறான்

அவளோ கனவில் நீந்துகிறாள்
உள்ளங் கையில் ஏந்துகிறேன்

தனிமையில் உனையே
யோசிக்கிறேன்
அனிச்ச மலருனை நேசிக்கிறேன்...

தயங்கி தயங்கி நான்
நெருங்குகிறேன்
இடைவெளி ஏனோ
குறையவில்லை...

காட்டு குயிலவள் கண்ணுகுள்ளே
நான் பேசும் ரகசியம் முடிவதில்லை...

பூங்கா மலரே பூந்தளிரே
நீயே என்னில் ஒரு பாதி
உள்ளே இருப்பது உன்முகமே
அறிந்துகொள்ளடி மார்மோதி..

அறையினுள் அவிழும் கூந்தலிலே
என் இரவை பகலை மறந்திருப்பேன்

இனியவள் இங்கனம் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்....

ஒளியும் இல்லா பின்னிரவில் தொலைவில் கூவும் ரயிலிவளோ
விழியில் என்னை விழுங்கிவிடும்
குவளை சூடிய குயிலிவளோ...

வீசும் தென்றல் நீயானால் அதுபோல்
மருந்து பிரிதில்லையே ...
அந்த தென்றல் போல் தொடுவதற்கு
அத்தனை கைகள் எனக்கில்லையே .....

எழுதியவர் : அர்ஷத் (13-Apr-17, 8:47 am)
பார்வை : 185

மேலே