நகைச்சுவை- நாளைய டாக்டர்

( ஒரு நோயாளி புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனையை
அடைகின்றான் , அங்கு டாக்டரைப் பார்க்க காத்திருக்கிறான் )


மருத்துவமனை அலுவலர் காத்திருக்கும் நோயாளியாய்ப் பார்த்து

அலுவலர் : சார் உங்க முறை வந்திகாச்சு , நீங்க டாக்டரேட் காண
உள்ளே போகலாம் என்று கூற , நோயாளி உள்ளே போகிறார்

அங்கு டாக்டர் அறையில் ஒரு எந்திர மனிதன் , ஒரு லேப்டாப் சில
ஒயர்கள் காணப் படுகின்றன; எங்கிருந்தோ ஒரு குரல் இங்கே
அருகே வரவும் என அழைக்க , ஒன்றும் புரியாது , நோயாளி
டாக்டர் ரூம் ஐ விட்டு ஓடி வெளிய வந்து , அலுவலரைப் பார்த்து

நோயாளி : ஐயா, என்னய்யா இது என்ன ஏமாற்று வேலையா
உள்ளே டாக்டர் யாரும் இல்லையே , நான் யாரைப் பார்க்க என்கிறான்
அதற்க்கு அலுவலர் கூறுகிறார் ,

அலுவலர் : சார், நீங்க உள்ளே பார்த்த எந்திரன் தான் டாக்டர், ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்
ஜப்பானியர் , நீங்கள் உங்களை அவரிடம் தாராளமாக கன்சல்ட்
பண்ணலாம்; உங்க ப்ரிஸ்க்ரிப்டன் ,பரிந்துரை எனக்கு
பிரிண்ட்-அவுட் மூலம் வரும் நீங்க பெற்றுக் கொள்ளலாம்

நோயாளி : (ஒன்றும் புரியாமல் உள்ளே மீண்டும் போகிறார்)

இதுதான் நாளைய வைதியமாய் அமையும் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-17, 2:26 pm)
பார்வை : 371

சிறந்த நகைச்சுவைகள்

மேலே