இன்னொரு முறை

இன்னொரு முறை குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவாரு காபி கோப்பயை கழுவி வைத்துவிட்டு தன் சமையல் வேலையில் கவனத்தை திருப்பும் அம்மாவிடம் இன்னொரு கப் காபி மாஆஆஆ என்று கேட்கிறான் மகிழ்.

பூகம்பம் வந்தது போல் ஒரு உணர்வை ஏற்ப்படுத்தியது, காபி கப் மேசையின் மீது வந்தமர்ந்த வேகம்,

“ஒரு கல்ல்ல்.. ஒரு கண்ணாடி” என்ற பாட்டைக் கேட்டவாரு, உடைந்து போய் ஓராயிரம் தையல்கள் போடப்பட்ட ரிமோட்டை எடுத்து செய்தி சேனலிற்கு மாற்றினான். அரசியல் சற்று அதிகமாக இருந்ததால் கேபிளை பிடுங்கி தற்கொலை செய்து கொண்டது டிவி.

வாட்ஸ் ஆப் செயலியை செல்லமாய் தட்டி ஆன்லைன் உலகில் நுழைந்து, பார்வார்டு குப்பைகளை பார்த்தும், படிக்காமல் அகற்றிவிட்டு வெளியே சென்றான்.

மதுக்கடையை நோக்கி நிற்க்கும் மனித மந்தைகளை கடந்து செல்லும் போது, இலக்கு தெரியாமல் காற்றில் நடனமாடியபடி ஒரு இலை பறந்து வருகிறது, அது எங்கு விழும் என்பதை பார்ப்பதற்குள் பேருந்து நகர்கிறது.

பேருந்தில் ஏற்படும் சில்லரை சண்டைகள் சுவாரஸ்யமே, அது நமக்கு வராத வரை என நினைத்தவாரு தன்னிடம் இருந்த சில்லரைகளை தேடி எடுத்து டிக்கெட் எடுக்கிறான் கடற்கறைக்கு.

தனக்காக, வெகு நாட்களுக்குப் பிறகு காத்திருக்கும் மதியை தேடி கண்டுபிடித்து, அவள் அருகில் சென்று அமர்ந்தான் மகிழ். பல மணி நேரம் கடந்தும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

கடற்கறையில் தன் கைகளால் ஹவ் ஆர் யூ? என்று எழுதினாள் மதி.

பதிலுக்கு குட் என்று எழுதினான் மகிழ்.

சிறிது நேரம் கழுத்து இருவரும் முகம் பார்த்து பேசினர்.

பிரச்சினைகளுக்காக காதலை கைவிட்டவர்களுக்கு மத்தியில், காதலுக்காக பிரச்சினைகள சரி செய்துவிட்டு மீண்டும் காதலைத் தொடர்ந்த மதியையும் மகிழையும் பார்த்து கடல் புன்னகைத்தது தன் அலைகளை அவர்கள் கால்களில் பட வைத்து.

தன் கையில் வைத்திருந்த சிவப்பு நிற வாழ்த்து அட்டையை மதியிடம் கொடுத்தான். “முற்றுப் பெறாத காதல் வேண்டும் இன்னொரு முறை”-என்று எழுதப்பட்டிருந்தது.

பதிலுக்கு தன்னிடமிருந்த அட்டையை மகிழிடம் கொடுத்தாள்.”முற்றுப் பெறாத செல்லச் சண்டைகளும் வேண்டும்”-என்று எழுதப்பட்டிருந்தது.

இருவரும் கடற்கறையில் நடக்க ஆரம்பித்தனர். பல மாதம் பார்க்காத கோபமோ என்னவோ, இருவரின் சுவடுகளையும் அழித்து செல்லச் சண்டை போட்டது கடல் அலை.

எழுதியவர் : அருண்குமார் (15-Apr-17, 1:57 am)
சேர்த்தது : அருண்குமார்
Tanglish : innoru murai
பார்வை : 655

மேலே