உண்மை விளம்பி
வருடம் தோறும் பிறக்கிறது புதுவருடம்!
பரிகாரங்கள் பகர்கிறது ஆரூடம்!
ஆரூடம் தேவை இல்லை!
பரிகாரத்திற்கு வேலை இல்லை!
அன்பின் வழி எண்ணமும்,
கனிவின் வழி பார்வையும்,
பண்பின் வழி சொல்லும்,
அறத்தின் வழி செயலும்,
உள்ளதா என உன்
உள்ளத்தை ஆய்வு செய்!
இல்லையெனில் உடனடியாய்
மனதினை மடை மாற்றம் செய்!
வாழும் நொடிகள் இனிதாகும்!
நாட்கள் அனைத்தும் நம் வசமாகும்!