நடந்தது என்ன

நோட்டம் விட்டார்கள்!
கூட்டமாய் வந்தார்கள்!

பணத்திற்கு குறி வைத்தார்கள்!
நகை கேட்டு மிரட்டினார்கள்!

பயம் காட்டினார்கள்!
பணிய வைத்தார்கள்!

பேராசை கொண்டகும்பலால்
ஒரு கொள்ளை நடந்தது அங்கே...
.
ஊரோ ஒரு திருமணம் முடிந்ததாய்
பேசிக்கொண்டது!

எழுதியவர் : (15-Apr-17, 4:10 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 59

மேலே