எது வாழ்க்கை
என்ன வாழ்க்கை ...
சில நேரங்களில்
பல பேர் மனதில்...
வாழ்ந்தது வாழ்க்கையா...
வாழ்ந்துகொண்டிருப்பது வாழ்க்கையா ...
வாழப்போவது வாழ்க்கையா..
ஏதோ எண்ணங்களின்
சலனம் இன்று ...
குழந்தையாய் குதூகலமாய் ....
அன்னை மடியில் ஆனந்தமாய் ..
அப்பா தோளில் தோரணமாய் ..
அண்ணன் அக்கா தங்கை என்று
அட்டகாசமாய் அற்புதமாய் இருந்தேனே
அதுதான் வாழ்க்கையோ...
பள்ளி சென்றேன் பாடம் படித்தேன்
ஆட்டம் பட்டம் தோழர் தோழி
என்று துக்கமும் இல்லாமல்
தூக்கமும் இல்லாமல் விளையாட்டாய்
வாழ்ந்தேனே அதுதான் வாழ்க்கையோ ...
கல்லூரி... கனவுகள் ...
நண்பன் ... சந்தோசம்...
காதல்... சோகம் என்று
கலவையாய் வாழ்ந்தேனே
அதுதான் வாழ்க்கையோ...
பட்டம் பெற்றேன் .. பட்டதாரி ஆனேன்...
வேலை .. கல்யாணம் .. குழந்தைகள்
பெற்றேன் ... அவர்களுக்கான
ஒரு வாழ்க்கைக்காக நானும்
சேர்ந்து வாழ்ந்தேனே அதுதான்
வாழ்க்கையோ...
தனியாக யோசிக்கிறேன்...
என் குழந்தைகள் இன்று
தாய் தகப்பன் ...
நங்கள் இன்று தாத்தா பாட்டி..
ஒரு வேலை இதுதான் வாழ்க்கையோ...
தெளிவில்லாத குழப்பம்...
இருக்கும் காலத்தையும்
வாழ்ந்து பார்ப்போம் ...
ஒரு வேலை அது கூட
வாழ்க்கையின் அர்த்தம் தரலாம்...
எது எப்படியோ வாழ்க்கையில்
என்னவெல்லாம் இருக்கும்
என தெரிகிறது...
ஆனால்
வாழ்க்கை என்றால்
என்ன என்றுதான்
தெரியவில்லை ...
எனக்கு மட்டும் அல்ல ...
பல பேருக்கு...