நான் நேசிக்கும் எனதுப்பணி - சகி

எத்தனை துன்பங்கள்
எனக்குள் இருந்தாலும்
என்னலுவலகம் சென்றதுமே
மறந்துவிடுவேன் ......
சிலநேரங்களில் மனதை
காயப்படுத்தும் கடும் சொற்களை கேட்க நேரிடும்
தருணங்களில் மனம்
சோர்வடையும் ...
என்னுள் தன்னம்பிக்கை
என்றும் குறைவதில்லை .....
அதிகமாக என்பணியை
மிகவும் நேசிப்பதால்
அதிகப்படியான பாடங்களை
கற்றுக்கொடுக்கிறது ......
காதலில் உண்டான
காயங்கள் ......
குடும்ப சூழ்நிலைகள் .....
சுயநலத்திற்க உறவாடும்
உறவுகள் .....
எனக்குள் புதைந்துக்கிடக்கும்
வலிகளை சுமந்துக்கொண்டு ....
அனைத்துமே மறந்தும்
சிலநேரங்களில் இவைகள்
என்னை தொடும் நேரங்களில்
முதலாளியின் அழைப்பை
செவிகள் தீண்டும் கணம்
அனைத்தும் பறந்தே விடும் .....
எனதுப்பணி என்றுமே
எனக்கு பளுவாக
தோன்றியதே இல்லை .
அதிகாரத்தை அன்பாக
காட்டும் முதலாளிகளின்
மத்தியில் எனதுப்பணி .....
ஆதலால் எனதுப்பணி
என்னையும் நேசிக்கிறது ...
நானும் நேசிக்கிறேன் ....
கடந்துவந்துள்ளேன் ......
வேலையாட்களை
மனிதராக எண்ணாமல்
மனதை காயப்படுத்தவே
முதலாளியான முதலைகளின்
கீழ் பணியாற்றி வெறுப்படைந்து
பட்டம் பெற்றதை எண்ணி
நொந்துள்ளேன் ......
என்றுமே கடவுளுக்கு
நன்றி சொல்வேன் ... .
எனதுப்பணியை நேசிக்குமளவுக்கு முதலாளிகளை கொடுத்தமைக்கு ......
நன்றிகள் பல ......