என் மரணத்தின் முகவரி தேடி 555

என்னவளே...

நீயும் நானும் பழகிய இந்த
மூன்றாண்டு கல்லூரி நாட்களில்...

நீயும் நானும் சேர்ந்தோம் காதல்
என்னும் அற்புத உறவால்...

எனக்காக நீ கண்ணீர்
சிந்துவதும்...

உனக்காக நான் கண்ணீர்
சிந்துவதும்...

இரண்டு உடல் ஒரு
உயிராக வாழ்ந்தோம்...

நான் கேட்க்கும் போதெல்லாம்
எனக்கு முத்தங்களை கொடுப்பாய்...

என் கன்னங்களில்
மட்டுமே எப்போதும்...

நீயும் நானும் பிரியும்
அந்த நாளில் மட்டும்...

ஏன் கொடுத்தாய் என்
இதழ்களில் முத்தம்...

அன்று முதல் நீயும் நானும்
சந்திக்காமலே ஏனோ தெரியவில்லையடி...

உன் கைபேசி எண்களும்
தெரியவில்லை...

உன் முகவரி தெரிந்தும்
உன்னை சந்திக்க முடியாமல்...

உன் நினைவுகளோடு நான் பெயர்
தெரியாத தெருக்களிலும்...

சுற்றி வருகிறேன் என்
மரணமென்னும் முகவரி தேடியே...

என் இதயத்தில் மட்டும்
வலிகள் இல்லை...

நீ கொடுத்த முத்தத்தால்
என் இதழ்களிலும் வலிதானடி...

இன்றுவரை...

இதழ்களில் இறுதி
முத்தம் கொடுத்தவளே...

என் இறுதி மூச்சிக்குமுன்
வருவாயோ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Apr-17, 8:26 pm)
பார்வை : 635

மேலே