காலங்கள் கடந்தன

காலங்கள் கடந்தன... ஆதவன் ஆதவனாய்
காலங்கள் கடந்தன... நிலவு நிலவாய்
காலங்கள் கடந்தன... வான் வானமாய்
காலங்கள் கடந்தன... மழை மழையாய்
காலங்கள் கடந்தன... குளிர் குளிராய்
காலங்கள் கடந்தன... கடல் கடலாய்
காலங்கள் கடந்தன... வெயில் வெயிலாய்
காலங்கள் கடந்தன... தீ தீயாய்
காலங்கள் கடந்தன... மரம் மரமாய்
காலங்கள் கடந்தன... புல் புல்லாய்
காலங்கள் கடந்தன... மிருகம் மிருகமாய்
காலங்கள் கடந்தன... பறவை பறவையாய்
காலங்கள் கடந்தன... மண் மண்ணாய்
காலங்கள் கடந்தன... மனிதன் பணமாய்


#மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (18-Apr-17, 10:25 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 116

மேலே