பசி பலவிதம்

குழந்தை பருவத்தில்
நித்திரை பசி
மாணவ பருவத்தில்
விளையாட்டு பசி....

வாலிப பருவத்தில்
ஆளுக்கொரு பசி
காதல்பசி கல்விபசி
வேலைதேடும்பசி
அழகுபசி போதைபசி
ஈகோபசி பணபசி
பெண்தேடும் பசி ஆடல்பசி
பாடல்பசி சினிமாபசி
உடைபசி அலங்காரபசி...

நடுத்தரவயதில்
பொருள்பசி மண்பசி பொன்பசி
கூடல்பசி ஊடல்பசி
வாகனபசி சொந்தவீடுபசி
கௌரவபசி
ஆளுமைபசி அகங்காரபசி
நான் எனும் ஆணவபசி
ஆட்சிபசி புகழ்பசி...

முதியோர் வயதில்
துணைபசி ஓய்வுபசி
பாசபசி அருள்பசி
உதவிபசி மருத்துவபசி
சின்ன சின்ன ஆசைகளின் பசி...

மனிதன் இத்தனை
பசிகளின் மத்தியிலே
தன் வயிற்றுபசியை
மறந்து இன்னும்
பசியோடுதான்
வாழ்கிறான்....

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Apr-17, 8:53 am)
பார்வை : 148

மேலே