இந்தியாவின் முதுகெலும்பு

கட்டிடங்கள் கட்ட இடங்கள் தேடியவனே,
கட்சிக்காக நிதியை நாடியவனே,

முளைவிட்ட மண்ணிற்கு விலை போட்டவனே,
கலை மிகுந்த நாட்டிற்கு சதி செய்தவனே,

கனியை விட்டு கணினியிடம் சென்றவனே,
உன்னால் விதையை விட்டு விஷத்தை எடுத்தான் விவசாயி.

சுரண்டி சுரண்டி மண்ணின் மகத்துவத்தை அழித்தாய்,
உன்னால் இருண்டு கிடக்கிறது நம் பூமித்தாய்.

ஐந்தறிவு மாக்களுக்கு தெரிந்த விவசாயம்
ஆறறிவு மக்களுக்கு தெரியவில்லை.

இனி எங்கு தேடுவேன் ரவை, அரிசி, கோதுமை?
தலைவிரித்து ஆடுகிறது ஆங்கில உணவின் கொடுமை.

மேல்நாடு செல்ல விசா எடுக்கும் மக்கள் ஒரு பக்கம்,
மேல்நாட்டு உணவான பிசாவிற்கு அடிமையான மக்கள் மறுபக்கம்.
அழிந்தது விவசாயம், அழிகிறது இந்தியா...

நாடுவிட்டு நாடு வந்த கலவரம் பொய்,
நாட்டிற்குள்ளேயே பகைகொள்ளும் நிலவரம்...

பிறர் பசியை போக்க கடன் வாங்கி பயிரிட்டவனே,
உன்னால் வயிறு நிறைந்தவர்கள்,
நீ இறக்க கயிறல்லவா கொடுத்தார்கள்...

எழுதியவர் : கருப்பு ரோஜா (18-Apr-17, 1:08 am)
சேர்த்தது : கருப்பு ரோஜா
பார்வை : 1355

மேலே