மர்மத்தின் பக்கம் - தொடர்கதை- பாகம் 3
பாகம் 2ன் தொடர்ச்சி....
அந்தப் பூங்காவில் நெடுநேரம் தேடிய பிறகு, தந்தை ஒரு மாயப்பெட்டியைப் பழுதடைன்த நிலையில் கண்டார். அதனருகில் அவர் செல்ல முற்பட்டபோது, ஏதோ ஒரு சக்தி தன்னை அதனுள் இழுப்பதை உணர்ந்தார்.
தீடீரென, தந்தை பெட்டிக்குள் சென்றுவிட்டார். ராபர்ட்க்கும், ஏஞ்சலாவுக்கும் ((தாய்க்கும்)) பகீரென ஆகிவிட்டது.
தொண்டைநீர் வத்த கத்தினாலும், ஒரு பயனும் இல்லை. எனவே, அவர்கள் விரைந்து வீட்டிலுள்ள பூஜை அரையில் ஒளிந்துகொண்டனர்.
பெட்டிக்குள்....
இருண்ட ஓர் அரையில் செய்வதறியாது தவித்தார் தந்தை. அப்போது, ஓர் அசரீரி குறல் கேட்டது. அது கூறியதாவது,
"நீங்கள் என் 18 நூற்றாண்டு கால தவத்திற்குக் கிடைத்த இறை ஆவீர்கள். நீங்கள் எனது இலட்சியத்தை அடைய உதவியே ஆகவேண்டும். அதற்கு முதலில் நீ உன் உயிரைத்தர வேண்டும்."
இதைக் கேட்டதும் அச்சம் கொண்ட ஜார்ஜ், தனக்குத் தெரிந்த சில மந்திரங்களைச் சொல்லி, தப்பிக்க முன்றார்.
அசரீரி: ஹாஹா!! நானே ஒரு சூனியக்காரி! நீ எனக்கே மந்திரம் போடுகிறாயா! நான் சொல்கிறேன் பார் மந்திரம்.
என்று சொல்லி சூனியக்காரி, ஒரு மந்திரத்தினால், ஜார்ஜின் உயிரை ஓர் மந்திர உருண்டையில் அடைத்தாள். அதன் மூலம், ஜார்ஜ் சூனியக்காரியின் சேவகன் ஆனான்.
சூனியக்காரியின் ஏவல்படி, ஜார்ஜின் ஆவி, வீட்டிற்குள் சென்று மயக்க நிலையில் இருந்த டேவிட்டையும், இளையமகன் ராபர்ட்டையும், மனைவியையும் வீட்டிலிருந்து துரத்திக்கொண்டே வந்து, பூங்காவில் போட்டது.
அப்போது, அசரீரி ஆனது பேசத் தொடங்கியது.....
"ஏய்! உங்களுக்கு ஜார்ஜ் உயிருடன் வேண்டுமாயின், நான் சொல்வதைச் செய்யுங்கள். இல்லையேன், நீங்கள் அனைவரும் எனக்குப் பலி ஆவிர்கள்"
டேவிட்: ஏய்! நாங்கள் ஏன் உனக்கு அஞ்ச வேண்டும்? என் தந்தையை என்ன செயதாய்? சொல்.
சூனியக்காரி: ஹாஹா! சவப்பெட்டியில் அடைத்து வைத்துள்ளேன். இது தான் உன் தந்தையின் ஆவி. நன்றாகப் பார்த்துக்கொள். ஹா ஹா ஹா!
சற்று நேர யோசனைக்குப் பிறகு......
டேவிட்: அம்மா! நமக்காகவும், நம் தந்தைக்காகவும் நான் இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
ராபர்ட்: ஆம் அம்மா. நானும் அண்ணனுடன் செல்கிறேன்.
தாய் - ஏஞ்சலா: (கவலையுடன்) வெற்றியுடன் திரும்புங்கள் மகன்களே!
டேவிட்டும் ராபர்ட்டும் சூனியக்காரியுடன்,
ஏய்! இப்போது உனக்கு என்ன வேண்டும் சொல்.
சூனியக்காரி: என் பரம எதிரியாகிய 'ஹக்கூ' என்ற மந்திரவாதியைக் கொல்ல வேண்டும். ஓர் மந்திர மூலிகையின் மூலமாக அவன் பல நூற்றாண்டுகள் வாழும் திறனைப் பெற்றான். ஆனால் எனக்குத் தவறான மந்திரத்தைச் சொல்லி என்னை 18 நூற்றாண்டுகள் தண்டித்து விட்டான்.
துரோகி ஹக்கூவைக் கொல்ல என்னால் மட்டும் இயலாது. ஏனெனில் அவனும் ஒரு மந்திரவாதி சூனியக்காரன். அதற்கு எனக்கு இளமை வாய்ந்த உடலும், முதுமை வாய்ந்த அறிவும் தேவை. அதனால் தான் நீங்கள் எனக்குத் தேவை.
இதைக்கேட்டதும் அனைவருக்கும் பகீரென ஆனது.
ஒரு மந்திரவாதியால் 18 நூற்றாண்டுகள் கூட வாழமுடியுமா?
அப்படிப்பட்ட ஒருவனை நம்மால் எதிர்த்துப் போரிட முடியுமா? என்பன போன்ற கேள்விகள் உருவாயின.
அதனை அறிந்த சூனியக்காரி, இடத்தைப் புகையால் நிரப்பி, டேவிட், ராபர்ட் ஆகியோருடன் ஜார்ஜின் ஆவியையும் மந்திரப்பெட்டிக்குள் இழுத்துச் சென்றது.
பெட்டிக்குள் என்ன உபதேசம்????????
அடுத்த பாகம் விரைவில்........