மர்மத்தின் பக்கம் - இதுவரை - Recall

குறிப்பு: இக்கதை முழுவதுமாக ஒரு கற்பனைக்கதையாகும்.

2 ஆம் நூற்றாண்டில், சீன தேசத்திலுள்ள ஓர் ஊரில்,
"சிங்கா! புங்கா! மந்திரா ஏமி உள்ளா சந்திரா! ஹஞ்சகா பஞ்சகா!"......
என்று, சூனியக்காரி ஒருத்தி, மேற்கண்ட மன்ந்திரங்களைச் சொல்லி, உலக சக்தியைத் தன்னுள் அடக்க நினைத்தாள்.

சூனியக்காரி: ஆ..... என்ன இது! இது என் தேகத்தை ஏதோ ஒரு கல்லறைக்குக் கொண்டு செல்கிறதே!!!! ஐயோ! என்னால் முடியவில்லையே!!!!

சூனியக்கடவுள்: சூனியக்காரி மந்தாரி, நீ ஓர் சாபத்திற்கு உண்டாகியுள்ளாய். அதனால் தான், இம்மந்திரம் உனக்கே திரும்பி விட்டது. மேலும், நீ 'ஏமி' என்ற மந்திர வார்த்தையைப் பயன்படுத்தி, உனக்குப் பாதகங்களைச் செய்யுமாறு நீயே உத்தரவிட்டுவிட்டாய்.

சூனியக்காரி: ஐயா! எனக்கு விடுதலை என்பதே கிடையாதா?

சூனியக்கடவுள்: உண்டு. ஆனால் அதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள், இவ்வறையில் அடைபட்டுக் காத்திருக்க வேண்டும்.

"கடல் தாண்டி நான்கு மணிகள்
இம்மண் தொட்டு வணங்கி வருமோ,
அப்போது ஈயும் விடுதலை வாய்ப்பு
உனக்கு கிட்டும் ஆயுள் மீட்பு."

சூனியக்காரி: ஐயா! அந்த நான்கு மணிகள் எப்போது இங்கு வருவார்கள்?

சூனியக்கடவுள்: அவர்களுக்காக நீ பதினெட்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். உணவின்றி உறக்கமின்றி நீரின்றி தவம் செய்ய வேண்டும். கண்ணைத்திரக்காமல், உடலை அசைக்காமல் பதினெட்டு நூற்றாண்டுகள் இம்மாயப்பெட்டிக்குள் நீ கழிக்க வேண்டும். இல்லையெனில், உனக்கு விடுதலையுமின்றி, மரணனமுமின்றி, இவ்வுலகம் அழியும்வரை இப்பெட்டிக்குள்ளே பைத்தியம் போல் திரிவாய்.

பதினெட்டு நூற்றாண்டுகள் எவ்வாறு உண்ணாமல், உடலை அசைக்காமல், கண்ணைத்திரக்காமல் செலவிடுவது?
பார்ப்போம்...

18 நூற்றாண்டுகள் கழித்து, 20 ஆம் நூற்றாண்டில், Natural Crime Identifierஉம், அவரது குடும்பமும் சீன தேசத்திற்கு வந்தனர். Mystery Villas என்ற பங்களாவில் தங்கி, தனது ஆராய்ச்சியைத் தொடங்க நினைத்தார் Natural Crime Identifier, ஜார்ஜ். ஆனால், சூனியக்கடவுள் கூறிய அந்த நான்கு மணிகள் தாங்கள் தான் என அறியாதவர்கள் அவர்கள்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே, இருண்டு வரண்டு கிடந்தது ஒரு பூங்கா. ஜார்ஜின் மகன்கள் டேவிட்டும், ராபர்ட்டும் அங்குச் சென்று விளையாட முற்பட்டனர்.

மர்மத்தின் ஆட்டம் ஆரம்பம்.....
மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த ராபர்ட், தனது தந்தையைப் போன்ற நுண்ணறிவும், ஆன்மிகக் குணமும் வாய்ந்தவன். அப்பூங்காவில் தங்கள் குடும்பத்திற்கு ஏதோ தீங்கு ஏற்பட இருப்பதை உணர்ந்தான்.
உடனடியாக அவ்விடத்தை விட்டுச் செல்ல முன்வந்தபோது, டேவிட், ஓர் பழமையான செப்புத்தகடில் எழுதப்ப்ட்டிருந்த மந்திரத்தைப் படித்தான். அம்மந்திரம், சூனியக்காரி சொன்ன அதே மந்திரம் தான். அதைச் சொன்னஉடன், அவ்விடம் கார்மேகத்தால் மூடப்பட்டு, இலைகள் பரந்து, எங்கும் சிவப்பாகிவிட்டது.

டம் டம் டம்......
கெட்ட அபாய ஒலி....
சூனியக்காரி விடுதலை செய்யப்பட்டாள். இனி உலகத்தின் கதி அதோகதிதான். டேவிட்டுக்குள் சூனியக்காரி புகுந்து விட்டாள்.

உலகம் மாட்டிக்கொண்டது.....

டேவிட்டுக்குள் சூனியக்காரி இறங்கிவிட்டாள்.
உலகம் மாட்டிக்கொண்டது.

சற்றே மயக்கமடைந்த டேவிட்டை, ராபர்ட் எழுப்பினான். ஒன்றுமறியாதது போல, டேவிட்,"எனக்கு என்னவாயிற்று?" என்று ராபர்ட்டிடம் கேட்டான்.

ராபர்ட்: அண்ணா, தமக்குள் ஏதோ ஒரு மாற்றம் உள்ளது. இவ்விடம் இருண்ட பிறகு, தாங்கள் மயக்கமடைந்து விட்டீர்கள்.!!!! ஆனால், தாம் எவ்வாறு சிவந்த கண்களைக் கொண்டு வானத்தில் பறந்து, பூமியைப் பிளந்து, மிகுந்த உக்கிரத்துடன் திகழ்ந்தீர்கள்? தம்மைக் கண்டால் எனக்குப் பயமாக இருக்கிறது.

டேவிட்: இல்லை! இல்லை! உனக்குப் பிரம்மை ஏதோ ஏற்பட்டுள்ளது. எனினும், இதனைப் பற்றி அம்மாவிடம் கூறாதே. ஏனெனில், இவ்விவகாரம் தெரிந்தால், பின் நம்மை எங்குமே தனியாக அனுப்ப அஞ்சுவர்.

ராபர்ட்: சரி அண்ணா.

விளையாட்டுக் களிப்பால், மாலையிலேயே தூங்கிவிட்டான் டேவிட்.
டேவிட்டின் கணவில்......
டேவிட், தன் கணவில், அதே மந்திரத்தை மீண்டும் உச்சரித்துத் தன் உடலுக்குள் சூனியக்காரியை வரத் தானே கட்டளையிட்டான்.

அவனது மந்திர வார்த்தைகள் பலித்தது.....

சூனியக்காரியின் ஆட்டம்.....

எனினும் டேவிட்டின் தந்தை ஜார்ஜ் ஒரு Natural Crime Identifier என்பதால், சூனியக்காரிக்குச் சற்று பதற்றமாகத்தான் இருக்கிறது.

சிறிதி நேரம் கழித்து.....

ஏஞ்சலா(ஜார்ஜின் மனைவி): டேவிட், ராபர்ட், இருவரும் உணவருந்த வாருங்கள்.
ராபர்ட்: அம்மா! அண்ணா தூங்கிக்கொண்டிருக்கிறார். விளையாட்டுக்களிப்பால் சீக்கிரம் தூங்கி விட்டார்.
ஏஞ்சலா: ஏன்? வாருங்கள் ஜார்ஜ், சென்று என்னவாயிற்று என்று பார்க்கலாம்.

மாடிக்குச்சென்றால், டேவிட்டின் உடலில் சூனியக்காரி தூங்கிக்கொண்டிருந்தாள். பதினெட்டு நூற்றாண்டுகள் தவம் செய்ததால் களித்துப்போனாள்.

எனினும், டேவிட் என நினைத்துக்கொண்டிருந்த பெற்றோர், அவனை எழுப்ப முயன்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், சூனியக்காரிக்கு ஏதும் கேட்கவில்லை. அதனால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாவம், ராபர்ட்டால் உண்மையை மறைக்க முடியவில்லை. உண்மையைத் தன் தந்தையிடம் கூறிவிட்டான்.

கோபமடைந்த தந்தை,"ஏன் இதனை என்னிடம் மறைத்தீர்கள்? இது எவ்வளவு இக்கட்டான விஷயம்."

ராபர்ட்: நான் கூறியிருப்பேன். எனினும், அண்ணா தான், இது தங்களுக்குத் தெரிந்தால், தாங்கள் எங்களைத் தனியாக விடமாட்டீர்கள் என்று தங்களிடம் கூற வேண்டாம் என்றார்.

ஏஞ்சலா: ஜார்ஜ், இனி இவர்களை நாம் தனியாகவே விடக்கூடாது.

ஜார்ஜ்: இல்லை. தனியாக விடக்கூடாது தான். ஆனால், நாமும் அவர்களைத் தனியாக விடுவதுபோல் செய்து, கண்கானித்துக்கொண்டே இருக்க வேண்டும். அஃதாவது, அவர்களை அவர்கள் வழியில் விட வேண்டும்.....
ராபர்ட், அந்தப்பூங்கா எங்குள்ளது? நாம் அங்குச் செல்லலாம் வா!.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (18-Apr-17, 7:50 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 236

மேலே