குடைவிரித்தல்

குடைவிரித்தல்

ஒரு மழை நாளில்
அவனும் குடை விரித்து நிற்கின்றான்

கருப்பு நிறத்தில்
குடைகளுக்கான எல்லா அடையாளங்களுடன் தானிருந்தது
அவனதுகுடை
அதன் முனை
உச்சியை நோக்கி
உயர்ந்து நின்ற மாதிரி இருந்தது
குடைவிரித்த வண்ணமே நிற்கின்றான் அவன்

கடந்து சென்ற
பாதசாரிகளின் கவனம்
சில நொடிகள் களவாடப்பட்டு மீட்க்ப்படுகிறது
அவன் நின்று கொண்டிருந்த
சாலையை கூட நிராகரித்து
செல்கின்றன
சில வாகனங்கள்...
சில சந்தேகங்களும்
தயக்கங்களும்
சில கைவிரிப்புக்ளும்
அவனை
நனையவிட்டு நகர்ந்தன
சாலையோரம் குடைபிடித்த
சில கருப்புக் காளான்கள்
நகைத்தன

அப்போது தான்
அது நிகழ்ந்தது
அவர் கைளில்
கவர்ச்சியாய் மடிக்கபட்ட
சில குடைகளுடன்
வந்தார்
குடைக்காரன் என்று அவர்
அடையாளம் கற்பிக்ப்பட்டிருந்தார்
அவருக்காக காத்திருந்தவர்கள்
குடைகளை விரித்தபடி
அகல்கிறார்கள்

அவரது கைகளில் எஞ்சியிருந்த
கருப்புக் கைக்குட்டையை
குடையா என்று
விசாரித்தனர் சிலர்

அவனோ அகலாமல் குடைவிரித்த வண்ணமே காத்துக்கொண்டிருக்கிறான்
தனிமை அவனை முழுவதுமாக நனைத்துக் கொண்டிருந்தது.

நிலாரவி.


திண்ணை இணைய இதழில்
வெளியான என் கவிதை.
(நன்றி-திண்ணை இணையஇதழ்)

எழுதியவர் : நிலாரவி (21-Apr-17, 6:23 pm)
பார்வை : 56

மேலே