அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா
ஒரு மூச்சில் இரு உயிரைக் காக்க
முழு மூச்சாய் முயன்றவள்!
தரணியில் உயிர் விளைய
தன்னுள் கரு விதைத்தவள்!
பிடிக்காத பொருளையும் பிள்ளை
பிழையின்றி பிறக்க புசித்தவள்!
சுகங்களை சுமையின்றி இறக்கி
சுமைகளை சுகங்களாக ஏற்றவள்!
தான் நோயுற்ற போதும்
சிறு நோவின்றிக் காத்தவள்!
அழுதால் தாங்காது அவள் நெஞ்சம்
உரைத்தால் தீராது அவள் பந்தம்!
அன்னை அவள் அன்பிற்கே
அகிலமாம் அவள் அனைத்திற்கும் !
'அம்மா ' அவளே என் 'ஆன்மா' !!!