என் அன்பு மகனே

ஒரு முறை கூட
நீ கடந்து வந்த பாதையை
திரும்பி பார்க்க நினைக்கவில்லை நீ

என்னோடு ஒரே குவளையில்
நீ குடித்த பால் இல்லாத காபி…

உப்பில் மட்டுமே ஊறிய
ஊறுகாய்...
மோர் இல்லாத கஞ்சி...
கட்டாந்தரையில்
கையே தலையணை எனக்கு
என் கால்களே தலையணை உனக்கு.....

என் முந்தானை வீசலே
விசிறிக் காற்று உனக்கு......
என் தலையில் கட்டு சுமைகள்
உன் பள்ளியில் கட்டணத்திற்கான
பணமாக...

என் வியர்வையில் உன் முன்னேற்றம்.....
உதிரத்தை வியர்வையாக சிந்தி சிந்தி
இன்று எனக்கு வியர்க்கவேயில்லை

ஆனால் உனக்கும்
வியர்க்கவில்லை ஏ.சி
உன் தலைக்குமேல்....
மணி ஒலிக்கும் தொலை பேசியை
எடுத்து காதில் வைக்க பணியாள்....

பாதணி சுத்தம் செய்ய வேலையாள்
கார் கதவு திறக்க ஒருவர்....
மனைவி, மனை, மக்கள்....

சந்தோஷம், சந்தோஷம்,
உன் வாழ்க்கைத்தரம்
வானளவில் உயர்ந்ததில்....

ஒரு முறை கூட
திரும்பி பார்க்காதே
உன் பழைய வாழ்கையை .....
ஒருவேளை
நீ திரும்பி பார்த்தால்
என் நினைவு வந்து
அதனால் நீ வருத்தப்பட்டு விட்டால்........

என்றுமே நீ வாழ்வில்
வருத்தப்பட்டு சோர்ந்து விடக்கூடாது
என் அன்பு மகனே.............

எழுதியவர் : (26-Apr-17, 1:44 pm)
Tanglish : en anbu makanae
பார்வை : 266

மேலே