அன்பின் மதிப்பு

அன்பென்னும் நெருப்பினுள் அகப்பட்டால் அது இருதயங்களில் பற்றிக் கொண்டு, அழுக்குகளை எல்லாம் அழித்து,
மனிதர்களின் உண்மையான இருப்பைத் தூய்மையாக்கி, அம்மனிதர்களின் வெளியீடெல்லாம் அன்பாகி சுற்றமெல்லாம் பரவி,
யாவற்றையும் சுத்தமாக்கி உலகின் உண்மையான ஆனந்த வாழ்விற்கு அடித்தளமிடுகிறது காற்றாய்...

அன்பால் அளிக்கப்படும் உணவே அமிர்தமாகிறது...
அன்பால் அளிக்கப்படும் வார்த்தைகள் சங்கமிக்கும் போதே வாழ்த்தாகிறது...
இருதயங்களுக்கு ஆறுதலாகிறது...
அன்பால் செய்யப்படும் உதவியே, உதவி பெறுவோருக்கு வாழ்க்கையை அள்ளித் தருகிறது...
அன்பால் அளிக்கப்படும் மருத்துவமே நோயைக் குணப்படுத்துகிறது...

அன்பால் அளிக்கப்படும் தாய்ப்பாலே குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனாகிறது...
அன்பால் பயிரிடப்பட்டு பாதுகாக்கப்படும் பயிர்களே அதிக விளைச்சலைத் தருகிறது....

அன்பால் போதிக்கப்படும் கல்வியே உண்மையான ஞானமாகிறது...
அன்பால் வழங்கப்படும், பெறப்படும் யாவும் இன்றியமையாதவையே...
ஏனெனில் அன்பே மகத்துவமானது...
அன்பே அகிலமாகிறது...

புவி ஈர்ப்பு விசை நம்மை வீழாது வாழ்விக்கக் காரணமென்ன?...
பூமி நம்மீது கொண்ட அன்பு...

அன்பே அன்பை அறிந்து மதிக்கக்கூடியது....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Apr-17, 1:03 pm)
Tanglish : anbin mathippu
பார்வை : 556

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே