தாயின் பாட்டு தேர்போல் நடக்குமென் தமிழ்த் தென்றலே

சின்னவிழிகள் சிரிக்கும் சித்திரங்கள்
கன்னமிரண்டும் மாங்கனித் தோட்டம்
புன்னகையோ புதுமலர்க் கொத்து
என்னில் விளைந்தஎன் நல்முத்தே !

ஆடிஅசைந்து வரும்நீ அழகுத்தென்றல்
ஆடி ஆடி விழுந்தால் உன்னழுகைக் குரல்
ஓடிவந்து எடுத்துன்னை அணைப்பேன்
கோடிமுத்தம் தருவேன் நீ சிரிப்பாய் !

மார்பமுதம் தருவேன் உன்தலை கோதி
மார்கழி குளிராய் நீசொல்வாய் மழலைமொழி
தேர்போல் நடக்குமென் தமிழ்த் தென்றலே
ஊர்கொண்டாடுமடா(டி) உன்னழகை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-17, 9:40 am)
பார்வை : 125

மேலே