மழை – மண் - காதல்

மழை : உன் மேனியில் சிலு சிலு சிலுவென
நான் வந்து விழுகையில் உடலெங்கும் சிலிர்த்து
காதல் தீருது ....

மண் : சில நேரம் சட சட சடவென
நீ வந்து விழுகையில் உடலெங்கும் நனிந்திட
மோகம் தீருது ....

மழை : முத்தங்கள் போதாதா .... இன்னும் வேண்டுமா ...
மண் : கொட்டட்டும் மோகம் தான் ... எந்தன் தாகம் தீரவே ....
(மழை : என் மேனியில் சிலு சிலு சிலுவென)
(மண் : சில நேரம் சட சட சடவென)

மழை : சில நாட்கள் எந்தன் காதல் இன்றி
நீயும் வாடிப் போக நானும் கண்டேன்

மண் : நீ வந்து என் மேனி நனைத்தாயடா
உன்னாலே நானின்று பிழைத்தேனடா ...

மழை : என் கண்கள் உனை தேடச் சொல்ல
உனைக் காண ஓடோடி வந்தேன் ...

மண் : உன்னாலே என் மேனி பூவாகும்
உள்ளுக்குள் நீயெங்கும் ஆறாக மாறி ஓட......

(மழை : என் மேனியில் சிலு சிலு சிலுவென)-2
(மண் : சில நேரம் சட சட சடவென)

மண் : உன்னை கானும் நொடி வரும் என்று?
நொடி தோறும் விழி எதிர் பார்க்க ...

மழை : என் வரவை மின்னல்கள் கத்திச் சொல்லும்
வருகின்ற போது இடி சத்தமிடும் ...

மண் : ராகங்கள் தாளங்கலோடு
ராஜாங்க நடைபோட்டு வந்தாய்

மழை : இடி மின்னல் தாளங்கள் தான் போட
நம் காதல் இன்னிசைப் பாடல் ஆகுமே ....

மழை : உன் மேனியில் சிலு சிலு சிலுவென
நான் வந்து விழுகையில் உடலெங்கும் சிலிர்த்து
காதல் தீருது ....

மண் : சில நேரம் சட சட சடவென
நீ வந்து விழுகையில் உடலெங்கும் நனிந்திட
மோகம் தீருது ....

மழை : முத்தங்கள் போதாதா .... இன்னும் வேண்டுமா ...
மழை : உன் மேனியில் சிலு சிலு சிலுவென
நான் வந்து விழுகையில் உடலெங்கும் சிலிர்த்து
காதல் தீருது ....

மண் : சில நேரம் சட சட சடவென
நீ வந்து விழுகையில் உடலெங்கும் நனிந்திட
மோகம் தீருது ....

எழுதியவர் : சிவா அலங்காரம் (27-Apr-17, 10:27 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 142

மேலே