கனவுகள் மேம்பட

விடுமுறை என்றாலே கேட்கும் முதல் ஒலி
விளையாடி திரியும் சின்ன மொட்டுக்கள் - இன்று,
வாட்டம் ஏனோ ஒலி கேட்கவில்லை என்றேன் ?
வார்த்தை கோர்க்க அறியாது வானத்தை காட்டியது ,
வாடியவாறு அழுகையுடன்.

வானம் பார்க்க இயலா வெயில்,
வண்ணம் எங்கனம் அறிந்திடா கண்கள்,
வெப்பம் தணிக்க துடிக்கும் மரங்கள் சோகத்தில்,
வினாவினேன் மரங்களே எங்கே உங்களின்,
வாசமுடைய பாசமிகு தென்றல் என்று ?

வினா எழுப்பாதே என் தோழியே,
விளையாடும் என் தோழரின்
வெப்பம் தணிக்க முடியாது,
விரல்க்கோர்த்து வாசம் தரும் உறவை இழந்து - என்
வாழ்க்கை தனிமையானதை கண்டாயா ?

வருத்தம் அதுதானோ,
விடுமுறை சுற்றிலா சென்றுள்ளனரோ ?
விடைகூறு அழைத்து வருகிறேன்.
வாட்டம் நீங்கும் அனைவருக்கும்.

சுற்றிலா போல தோன்றுதோ,
சுற்றிலும் உற்றுப்பார்,
சிதைந்து போன என் உறவுகளின் முடிவை பார்,
சிறுவர் விளையாட,
செதுக்கி கொன்றனரே பொறுத்தோம்,

சின்ன சின்ன பிள்ளைக்காட்டி,
சிரிப்பே அறியா மனிதர்கள்,
சொகுசாக வாழ்ந்திட எங்கள் வாழ்வை அழித்தனரே,
சென்று கேட்டுப்பார் உயிர் வரமொன்றை,
சற்றென்று வந்திடுமோ சிந்தித்து பார்,

கேட்ட மறுநொடி காரணம் இதுவோ,
கேட்கிறேன் என்று அன்னையை கேட்டேன்,
களிப்பாக நீங்கள் வாழ்ந்திட என்று ஆறுதல் சொல்ல,
கைபிடித்து குழந்தைகளின் சோகம் காட்டி,
களிப்பு என்றிரே பாருங்கள்,
களைப்பை உணர செய்து,
கண்ணீர் ததும்ப செய்வதுதான் சூழ்ச்சியோ என்றேன்.

தவறு செய்தோம் திருத்து கொள்வோம்,
தத்தை மொழி பேசும்,
தங்கங்களே வாருங்கள்,
தழைத்தோங்க செய்வோம்,
தரணியை மரங்களால் நிறைத்து,
தங்க இடமல்ல பூங்காவனம் அமைப்போம்,

மரமருகே செடி பதிக்க,
மரமது சிரித்த சிலிர்ப்பில்,
மயக்கும் சில்லென்ற காற்று உரச,
மலர்கள் மலர்ந்து துள்ளி குதித்து,
மான்போல விளையாடினர் மழலை !

பாடமது வாழ்க்கை பாடம்,
பதிந்திட்ட மனதில்,
பாதை மாற்றம் என்றுமாகாது,
பள்ளி செல்லும் வழியெல்லாம்,
பலவாறு விதை போட்டு,
பாதையதை பூந்தோட்டமாக்கினர்,

மன கவலை கொண்ட மரத்திடம்,
மனநிறைவு கொண்டாயா என்று கேட்க,
மனநிறைவா, நிறைவோ நிறைவு என்று,
மரங்கள் கைக்கோர்த்து ஆடிய ஆட்டத்தில்,

இசை எழுப்ப வானம் இணைந்து,
இனியதொரு இன்னிசையில்,
இணைந்தது இரு மேகமத்தில்,
இன்னகம் இனிக்குமாறு மழைபொழிந்தது,
இனிமையான வாழ்க்கை,
எங்கும் மலர்ந்தது !!!!

எழுதியவர் : ச.அருள் (29-Apr-17, 5:46 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
Tanglish : kanavugal mEmpada
பார்வை : 336

மேலே