அந்த மூன்று நாட்கள்
கண்களில் ஏதோ ஒரு தவிப்பு
இன்பத்தை இழப்பது போல் ஓர் ஏக்கம்
சின்ன சின்ன உரசல்களுக்கும்
சிலிர்த்திட்டு வரும் கோபம்
பாதை மாறிய பகலவனின்
பகைமையில் தோன்றிய
பௌர்ணமியின் அழகை
ரசிக்க மறந்து
ஆழ்ந்து சிந்திக்கும் நேரம் ,
யோசனையிலோ ஒன்றுமில்லை !!!
ஜோதிடராய் ,வருங்காலத்தை
வர்ணிக்க துடிக்கும் உணர்வு
அந்த மூன்று நாட்களுக்கும்
அறிகுறியான குறிப்புகள்
இவைகள் ...
முடியவில்லை
மூச்சடைக்க முடியவில்லை
சுவாசிக்கும் காற்றும்
கள்வனை போல் கழுத்தில்
இறுக்கிட்டு நிற்கிறது
பெண்ணின் பிறப்பில்
என்ன ஓர் ரகசியம் இது ??
உடலில் உதிரம் உறைய
உறக்கம் களைந்து
உளியை கொண்டு ஊசியை
அடிவயிற்றில் அடிப்பது போன்ற உணர்வு
அன்னையின் அகம் கொண்ட
அந்தரங்களை
அச்சிட்டு காட்டுகிறது
ஒவ்வொரு நொடியும்
மழலை பிறப்பின்
மந்திரத்தை
மாதரின்றி . போதிக்க வைக்கிறது
ஒவ்வொரு பொண்ணுக்கும்
கடவுளின் படைப்பில்
இயற்கையால் காயப்பட்டவர்கள்
இந்த பெண்கள் //
வலியின் உணர்ச்சியில்
அவள் விடும் கண்ணீர்
வற்றாது !!
ஒவ்வொரு மாதத்தின்
அந்த மூன்று நாட்களிலும் ??
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
