மகிழ்ந்துதான் பார்க்கும் மலர்

கதிரும் சிரித்திடும் மேலச்செவ் வானினில்
கண்ணுக் குவிருந்தாய் பிம்பம்பார் நீரில்
பிறைநிலா வோஎழில் நீலவண்ண வானில்
மகிழ்ந்துதான் பார்க்கும் மலர் !
இன்னிசை வெண்பா
----கவின் சாரலன்
பார்ப்பதும் மலர்
பார்ப்பவரும் மலர்
ஈற்றடி ஓரசை நிரை அசைச் சீர் மலரும் மலர் வாய்ப்பாடே !