தன்னம்பிக்கை

தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தோல்விகள் என்றும் நிரந்தரமில்லை
தாழ்வு மனப்பாண்மையைத் தகர்த்தெறி தோழா
தடைக்கல்லும் படிக்கல்லாகும் தோழா

உடலின் ஊனம் குறையொன்றும் இல்லை
மனதின் ஊனம் பெருங்குறையாகும்
மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு தோழா
தன்னம்பிக்கையே மானுடசக்தியின் பலமாகும்

மானுடசக்தியைக் கொண்டு
புதுவாழ்வு அமைப்போம் வா
மானுடசக்தியைக் கொண்டு
உலகை வெல்வோம் வா

உலகை மாற்றிடும் திறமை
உன்னிடம் நிறைய இருக்கு அதை
உலகை அறிய செய்து
உன் சிறப்பை எடுத்துக் காட்டு

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (1-May-17, 8:18 am)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : thannambikkai
பார்வை : 2208

மேலே