பெயரும் பொருளும்
பாம்பு மேல ஆடற நடராஜ் ஆனால் சிவபெருமான் இல்லை
கண்ணபெருமான்.
கருடனுக்கு பயந்து சாபத்தால் கருடன் அணுகமுடியாத மடு -- நீர் நிலையில் அடைக்கலம் புகுகிறான் காளிங்கன் என்ற சர்ப்ப ராஜன் . அவன் கக்கிய விஷத்தால்
மடு முழுதும் குடிக்க முடியாத நச்சாகிவிடுகிறது .இதையறிந்த நமது பாலநாயகன்
கோகுலத்து இளவல் கண்ணன் அங்கு வருகிறான் . சர்ப்ப ராஜனின் தலைகளில்
நர்த்தனம் ஆடுகிறான் .அவன் கொட்டத்தை அடக்கி அவன் மனைவியர் மிகவும்
துதித்துப் பாடியதால் அவனை உயிருடன் விட்டு வேறு இடத்திற்குப் போகச் சொல்கிறான் . இந்த நடனத்திற்குப் பெயர் காளிங்க நர்த்தனம் என்று பாகவதம்
சொல்கிறது
அப்படியானால் காளிங்க ராஜ் யார் ? சாட் சாத் கிருஷ்ண பகவான்தான் .
அந்த கிருஷ்ண பகவான்தான் ஜீவனுக்குப் பரமானந்தம் தரும் ஜீவானந்தம்
காளிங்க நர்த்தன ஜீவானந்த ராஜ் கண்ணன்தான் !
ஜீவானந்தம் என்ற பெயருக்குப் பொருளாக ஒரு பெரிய தூய அரசியல்வாதி
தமிழ் நாட்டில் வாழ்ந்தார் . இன்று தொழிலாளர் தினத்தில் அவரை நினைவு கூறுவது சாலப் பொருந்தும்
----கவின் சாரலன்

