கத்திரி வெயில்
கொப்புளிக்குது வெயில்
தத்தளிக்குது சென்னை
கத்திரி வெயிலே
கருணை காட்டு
புத்திரர் வாழ வழி சொல்லு
புரிந்தே பாவம் செய்தோம்
இயற்கை அழிய வழி செய்தோம்
உப்பைத் தின்றோம்
தண்ணீரின்றி தவிக்கிறோம்
கழனியெல்லாம் காடாச்சு
காடெல்லாம் வீடாச்சு
சுயநலமே சொத்தாச்சு
பொதுநலத்தை வித்தாச்சு
மாசடைந்து போச்சு உலகம்
மனித வாழ்க்கையோ நரகம்
இயற்கையின் அழிவு
மனித குலத்தின் பேரழிவு
உணர்ந்தா உண்டு விடிவு
உண்மையை நாளும் பரப்பு