நானும் பாலம் கட்டுவேன்
...................................................................................................................
நானும் பாலம் கட்டுவேன்..
சிவப்பெறும்பு சாரையைக் கடக்க
கருப்பெறும்பால் முடியவில்லை..
காகிதத்தில் பாலம் செய்து
கடத்தி விட்டேன் கருப்பெறும்பை..
அட்டைப் பாலம் வைத்த
அடுத்த சில நொடிகளில்....
ஆகா..
மேலே கருப்பெறும்பு சாரை..! ! !
கீழே சிவப்பெறும்பு சாரை..! ! !