வாட்டுகிறாய் வெந்தனலாய்
உள்ளத்தை உணராமல் நீ உதிர்த்த வார்த்தைகளால்
சில் சில்லாய் உடைந்ததுஎன் இதயம்
என உனக்கு தெரியாதா?
கார்மேகம் சுமந்திடும் நீர்த்துளியாய்
என் வலியின்
கண்ணீரை நீ கண்டு துடைத்துவிட
கரம் தர முடியாதா?
அனிச்சமலர் நான் என பனிக்கதிரே நீ அறியாய்.
இனி எனக்கு நீ என
உன் விழி என்னை தேடாதா?
இருப்பது வீண் என இறப்பை நோக்கிச்செல்லும்
என் உயிர் பூ உதிர்ந்து விட. கூடாதா?