தங்கை...
என் வாழ்வில்....
நான் சந்தித்த
இரண்டாம் தேவதை அவள்....
என் மூன்று வயதில் ...
என்னுள் இருந்த
கடவுள் நீங்கி.....
மனிதனாய் மாறிய பொழுதில்
கடவுள் அனுப்பி வைத்தான்
அவளை துணைக்கு....
அவளின் சுண்டுவிரல் தீண்டி
முத்தமிட.....
பற்றிக் கொண்ட என் விரல்களை ....
விடவே இல்லை இன்று வரை .....
நிச்சயமாய்.....
என் சிக்கலான சமயங்களில்
என்னை விட அழுதவள்
எனக்காய் .......
சண்டைகள் இடுவதும்
மறுகணமே
சமாதானங்கள் ஆவதும்...
அன்னை அறியாத ரகசியம்
இன்று வரை.....
சின்ன தவறுகளை
போட்டு கொடுப்பதும்...
பெரிய தவறுகளில்
கூட இருப்பதும் என....
புரியாத புதிர் அவள்.......
அவள் எப்போதோ கொடுத்த
சிறு பரிசு
இன்னும் இருக்கிறது என் கைகளில்.....
அவள் என் கை விடுத்தது
அவளின் அவரோடு போகிற நாளில்...
பழக்கப்பட்டுக் கொள் ...
என் நெஞ்சமே...
தேவதைகளும் ஒரு நாள்
உன்னை விலகிப் போவார்கள் என.......

