கைகளுக்குள் வானம்✍

💜💜💜

ஓரு குளிர்ந்த ஓடையில்
இரு கை குவித்து
அள்ளுகிறேன் நீரை

புரவியாய் வேகமெடுத்து
ஓடுகின்றன
கைகளை தழுவியபடி
கைகளுக்குள் சிக்காத நீர்

அள்ளிய நீரின் குளுமை
என்னுள் முழுவதுமாய் பரவுகிறது
சிறு நொடிக்குள்

இன்று வரையில்
எப்போதும் என் கைகளுக்கு
சிக்காத வானம்
என்னிரு கைகளுக்குள்
நீரில் படர்ந்து கிடக்கிறது
இப்போது நீலம் பூத்து

இதற்கிடையே
என் விரல்கள் பிளவில்
சன்னம் சன்னமாக
கசியும் நீரால்
கழுவபடுகிறது கால்கள்

கைகளுக்குள் கிடந்த
மிச்ச நீரை அந்த
ஓடைக்குள் கொட்டினேன்
தற்போது மீண்டும் இருகைகளை
குவித்து பார்க்கிறேன்
வானம் புலப்படவில்லை

கைகளுக்குள்
புலப்படாத வானம்
தற்போது தான் பார்க்கிறேன்
ஓடை மீது ஓடிக்கொண்டிருக்கிறது

இனி என்னை போல்
யாரோ ஒருவர்
தன்னிரு கைகளுக்குள்
ஏந்தலாம் ஓடையில் ஓடும்
அந்த வானத்தை......✍

💜💘💜
#பாரதி...

எழுதியவர் : பாரதி செல்லராஜ். செ (8-May-17, 7:13 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 156

மேலே