துரோகம்

மனிதத்தின் கொடிய விஷம்
விதி ஒன்றுண்டெனில் அதில் விலக்காய் பலர்
களங்கமிலா நட்பில் கறையாய் சிலர்
நூறு கயவர்கள் தன் உடல் கிழித்த போதும் சீறிப்பாய்ந்தவன் தன் உயிர்த் தோழனின் ஒற்றை வீச்சில் மரணித்தான்
சிதைந்தது அவன் தேகமல்ல பிளந்தது அவன் இதயம்
ஏழு ஆண்டு நட்பு இறுதி வரை - விஞ்ஞானத்தின் பிதற்றல்
நரிகளும் ஓநாய்களும் இருதயத்தில் குடிகொள்ளும் மனித இனமடா!
மாமன்னராம் சீசர் சிதையுண்டான் துரோகமதால்
ப்ரூடஸ்கள் நம்மிடையே வாழும் வரை நானும் துரோகத்தால் சிதைக்கப்பட்டவளே!!....

எழுதியவர் : கீர்த்திகா vivekananthan (9-May-17, 10:22 am)
சேர்த்தது : கவியாழினி
Tanglish : throgam
பார்வை : 123

மேலே