சலாவு55கவிதைகள்

உலகம் மாய தோற்றம் ..
உன்னை என்னை ..
பைத்தியமாக்கும் ..

இயற்கையையும் ..
இங்கே இழந்தாச்சு ..
இயந்திரமே எல்லாம் ஆச்சு ..

மரபணு மாற்றம் ..
மண் மீது வீசும் ..

உணவும் தண்ணீரும் ..
உரமாய் ஆனது .. நம்
உடலும் இங்கே ..
நோயால் வாடுது ..

படிப்பும் மருத்துவமும் ..
இங்கே வியாபாரம் ..
மக்களுக்கு மருந்தே ..
வாழ்வின் ஆதாரம் ..

அரசியலில் அதுதான் ஆதாயம் ..
விவசாயம் வீண் பேச்சு ..
சாராயமே சாப்பாடு ஆச்சு ..

பிறப்பு விபத்து ..
இறப்பு சம்பவம் ..
நன்மனம் சாகும் ..
பிற மனம் வாழும் ..

வாழ்க்கை வெளி வேஷம் ..
சொந்தமும் பந்தமும் ..
சொல்கிற வரையில் ..
உடன்பிறப்பு என்பது ..
உள்ளத்தில் மட்டும் ..
உற்ற துணையே ..
உடன் மட்டும் ..

பெற்ற பிள்ளை ..
எட்டி வைக்கும் ..
தாய் தந்தையரை ..
ஒட்டி வைக்கா விட்டால் ..

மனிதன் மாறுகிறான் ..
மனித குலம் மாற்றுகிறான் ..
மதங்களை ஆயுதமாக்கி ..
இவ்வுலகின் மயக்கத்திலே ..

இ.சலாவுதீன் ..

எழுதியவர் : சலாவுதீன் (9-May-17, 10:58 am)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 57

மேலே