கரிமா கறிமா
![](https://eluthu.com/images/loading.gif)
ஏண்டி நீ எதிர் காலத்தில நெறைய
நெறையா கறியா தின்னு பலசாலியா வளரணும்னு உனக்கு கறிமா -ன்னு பேரு வச்சுட்டாங்களா? இல்ல ஏதாவது குல தெயவம் பேரா?
😊😊😊😊😊😊😊
நான் என்னத்தடி கண்டேன். என்னோட அம்மாவும் அப்பாவும்
கடவுள் பக்தி உள்ளவங்க. சோதிட நம்பிக்கையும் அதிகம். குடும்ப சோதிடர் சொன்னபடி எனக்கு இந்த 'மா' -வில முடிற பேரா வச்சுட்டாங்க.உனக்கு வர்ற சந்தேகம் எல்லாருக்கும் வருது. என்ன அரத்தம் கேட்டு உயிர எடுக்கறாங்கடி. இந்திப் பேர, பெத்த புள்ளைங்களுக்கு வைக்கறது தானே சினிமா வந்த காலத்திலிருந்து தமிழர்களின் நாகரீகமா இருக்குது. "நல்ல அர்த்தமான பேரு. நாஞ் சொன்ன பேரையே வச்சுடுங்க"ன்னு சோதிடர்
சொன்னாராம்.பேருக்கான அர்த்தத்தை அவுரு சொல்லவே இல்லையாம். இந்தி தெரிஞ்சவங்க எல்லாம் எம் பேரக் கேட்டதும் 'ஸ்வீட் நேம்' -ன்னு சொல்லறாங்க. இந்தி தெரியாவங்கதான் எம் பேரக் கிண்டல் பண்ணறாங்க. நான் அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்ல. பேருங்கறது அடையாளத்துக்குத்தாண்டி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
(Garima = divinity, grace)
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க