சுடச் சுடச் செய்தி

காபியை அருந்தியவாறே செய்தித் தாளைப்
புரட்டினேன் .முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி .
ஆஹா அந்த ஊழல் பேர்வழியை கைது செய்துவிட்டார்கள்
என்று மனைவியிடம் சொன்னேன்.
என்ன ஆஹா
வெளியே விட்டு பதவியில் மீண்டும் அமர்ந்தாச்சு .
இதோ காலைப் பேப்பர் செய்தி. அதற்குள் எப்படி
வெளியில் வரமுடியும் என்றேன் .
பேப்பர் தேதியை சரியா பாருங்க . போன வாரப் பேப்பர் .
மாவு சலிப்பதற்காக டைனிங் டேபிளில் வச்சுருக்கேன்
ஓ நோ ......!
----கவின் சாரலன்