ஏய் விளம்பி

ஏய் விளம்பி, என்னடி விளம்பி.
😊😊😊😊😊😊😊
ஏனுங்க இந்த வயிசில என்ன கிண்டல் பண்ணி பாட்டு பாடறீங்களே நியாயமுங்களா அது. சித்தர மாசம் ஒண்ணாந் தேதி என்னோட 61 வது பொறந்த நாளக் கொண்டாடி கேக்கு ஊட்டிவிட்டீங்களே அத மறந்தீட்டாங்களா மச்சான்.
😊😊😊😊😊
அத எப்பிடீடி மறக்க முடியும். நீ ஏவிளம்பி வருசப் பொறப்பு அன்னைக்கு பொறந்நததால சோசியகாரன் சொன்னான்னு
'ஏவிளம்பி' -ன்னு எங்க அத்தையும் மாமங்காரனும் பெத்த மகளான உனக்கு அர்த்தம் தெரியாத பேர வச்சிட்டாங்கடி. நாம் பாடின பாட்டை வெளையாடிட்டு திரிற பசங்ககிட்ட இருந்துதாண்டி கத்துகிட்டேன்.
😊😊😊😊😊
ஏனுங்க மச்சான், கொஞ்சம் வெவரமா சொல்லுங்க.
😊😊😊😊😊😊
அடியே விளம்பி, வெளையாட்டு பொடிப்பசங்க உம் பேரக் கிண்டல் பண்ணி பாடின பாட்டைத்தாண்டி நாம் பாடிக்காட்டுனேன்.
😊😊😊😊😊
எங்க அப்பனும் ஆத்தாளும் அந்த சோசியகாரன் பேச்சக் கேட்டு இந்த மாதிரி இந்திப் பேர வச்சுட்டாங்களே.
😊😊😊😊😊
சரிடி விளம்பி. உம் பேர மாத்துலாமா?
😊😊😊😊😊
இந்த வயிசல அதெல்லாம் ஒண்ணும் வேண்டாமுங்க மச்சான்.

எழுதியவர் : மலர் (10-May-17, 11:24 pm)
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே