மனிதரில் புனிதர்கள் - செவிலியர்கள்

அன்பு ஆதரவு
இரக்கம் ஈரம்
அர்பணிப்பு பொறுமை
சகிப்புத்தன்மை
காலந்தவறாமை
அல்லும் பகலும்
அயராத உழைப்பு
போன்ற தியாகங்களை
அணிகலன்களாக
அணிந்து
மனிதகுலத்தின்
உயிர்காக்கும் தேவதைகள்..

சிஸ்டர் என்று
எல்லோராலும்
அன்புடன்
அழைக்கப்படும்
வெள்ளை சேவைபுறாக்கள்...

தொற்று
வியாதியென்றாலும் உயிர்க்கொல்லி வியாதியென்றாலும்
சொந்தம் பந்தம் எல்லாம்
தயங்கி நின்றாலும்
கடமைக்கு அப்பாற்பட்டு
தயங்காமல் கருணையோடு
சேவையாற்றும் தாயுள்ளங்கள்...

ஆபத்து சூழல்களில்
போர்கால அடிப்படையில்
உயிர்களை காக்க போராடும்
இவர்களின் பங்களிப்பு
ஈடு இணையற்றது
வெள்ளை சீருடை
அணிந்து வெள்ளை மனதோடு
சேவையாற்றும் தன்னலமற்ற
உயிர் காக்கும் மனித தெய்வங்கள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (12-May-17, 9:49 am)
பார்வை : 2726

மேலே