கோபம் தவிர்

எங்கிருந்து வருகிறது இவ்வளவு கோபம்?
உணவு பாத்திரத்தை எட்டி உதைக்கிறது...
அன்போடு வளர்த்தவரை ஒரே அடியில் கொன்று விடுவேன் என்கிறது...

இயலாமை சூழ்ந்த ஏழ்மையில் கோபத்திற்கொன்று குறைச்சல் இல்லை...

மரணத்தையே வேண்டி உண்ணாவிரதமிருக்க,
மரணமும் ஏழையைத் தீண்டத் தயங்குகிறதே...
அதனால், கோபமும் எழுகிறதே...
அவ்வாறு எழும் கோபம் தவறானதென அன்புடை மனமும் எடுத்து உரைக்கிறதே...

அன்புடை மனதால் இன்று வரை அநீதி இழைத்ததில்லை...
சுற்றிலும் அநீதி நிகழ தட்டிக்கேட்கச் செல்லும் தருணம் தடுத்த
அன்புடை மனம், அடுத்தவர்களுடைய சொந்த விடயங்களில் தலையிடாதே என்று தர்மம் போதிக்கிறது...

அன்புடை மனமே உடைமையாகியதால் அன்பை வழங்கி, அன்புடன் வாழ்ந்து அன்பால் மரணிக்க அன்பைப் பின்பற்றுகிறது....

சுகத்தை வாரி வழங்கும் ஆடம்பரம் வேண்டாம்...
வாழ்க்கைத் துணையும் வேண்டாம்...
உண்மையான அன்புடைய நட்பே போதும்...
தனக்கென்று எதையும் சேராது பிறருக்காக அனைத்தையும் வழங்கி அன்பில் வாழ்கிறது அந்த இருதயம்...

அளவற்ற அன்பே அணையாகி அநீதியை அகத்துள் அகப்படவிடாது, அருளை அள்ளி அளிக்கிறது அன்பால் ஆளப்படும் இருதயங்களில்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-May-17, 8:32 am)
Tanglish : kopam TAVIR
பார்வை : 1230

மேலே