அடக்கம்

========
சந்தன தோப்புக்கு சொந்தக்காரன்
பிணமோ தீயடக்கம் செய்யப்படுகிறது
காசுள்ளவன் பிணமோ
மின்னடக்கம் செய்யப்படுகிறது
சாமான்யன் பிணமே எப்போதும்
நல்லடக்கம் செய்யப்படுகிறது
எரித்த சாம்பலையும்
எரியாத மேனியையும் வாங்கிக்கொள்கிற
மண் மட்டுமே நிலை எதுவரினும்
தன்னடக்கம் கொள்கின்றது
*மெய்யன் நடராஜ்