ஏமியா

ஏமியா

பாட்டிம்மா!
😊😊😊😊😊😊
வாடி வெண்ணிலா. உங் கொழந்தை நல்லா இருக்கறளா? அவ பேரு..... எனக்கு மறந்தே போச்சுடி வெண்ணிலா.
😊😊😊😊😊😊
எம் பொண்ணுப் பேரு எமி பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊
ஏண்டி 'ஏமி' -ன்னா உம் பொண்ணுக்கு பேரு வச்சிருக்க? 'ஏமி' -ன்னா 'என்ன' -ன்னு தெலுங்குல அர்த்தம். மூத்த பொண்ணுக்கு இந்திப் பேர வச்சிட்டு ரண்டாவது பொண்ணுக்கு தெலுங்குப் பேர வச்சிட்டீங்களா.
😊😊😊😊😊😊
பாட்டிம்மா 'ஏமி' இல்ல; 'எமி' . அவுங்க ஒரு வெள்ளக்கார நடிகை. தமிழ்ப் படத்திலகூட நடிச்சிருங்காங்க. அவுங்க முழுப்பேரு எமி ஜாக்சன். அவுங்க பொடவ கட்டினா இந்தியப் பொண்ணு மாதிரி இருப்பாங்க. அவுங்க பேரத்தான் எம் மகளுக்கு வச்சிருக்கோம்.
😊😊😊😊😊
சரிடீ வெண்ணிலா, அந்த ஏமி பேருக்கு என்னடி அர்த்தம்?
😊😊😊😊😊
பாட்டிம்மா எமி -ங்கற பேரை இந்தியாவிலயும் சில கொழந்தைகளுக்கு வச்சிருக்காங்க. பன்னிரண்டு உலக மொழிகள்ல அர்த்தமில்லாத அந்தப் பேரு இருக்குது. நம்மவங்க சிலர் இந்திப் பேருன்னு நெனச்சிட்டு அர்த்தமில்லாத பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. அது மாதிரிதான் 'எமி'யும்.
😊😊😊😊😊
என்னது, அர்த்தமில்லாத பேரா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.


Close (X)

10 (5)
  

மேலே