செல் ஃ பி வித்

செல் ஃ பி  வித்

இளைஞனுக்கு QUICK FAME உடனடி பிரபல்யம் அடைய வேண்டுமென்று
ஆசை வந்தது. யோசித்தான் . ஐடியா வந்தது .
மூன்று செல் ஃ பி எடுத்தான் .

கழுதையின் அருகில் நின்று ...

கழுதையின் மேல் அமர்ந்து ....

கழுதை இவன் தோள் மேல் கால் வைத்தவாறு...

இதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டான் .ஒரே இரவில்
எக்கச் செக்கமான ஃ பாலோவியர்கள். இன்ஸ்டன்ட் புகழ்
பாராட்டுக்கள்.
ஆயினும் ஓரிரு நாட்களுக்குப் பிறகு வருத்தத்துடன் இருந்தான் .
ஓவர் நைட் இவ்வளவு பிரபலமாயிட்ட ...என்ன வருத்தம் என்று நண்பன்
கேட்டான்
WHAT IS NEXT DONKEY MAN ன்னு எல்லாரும் கேட்கறாங்க ?
எல்லாரும் என்னை கழுதை மனுஷனா ஆக்கிட்டாங்க ...
இத எப்படி மாத்தறது ?

கழுதைப் புலி ன்னு சொல்லுவாங்க ...நீ கழுதை மனுஷனா ?
இத மாத்தணும்னா நீ வேற விலங்கோட செல் ஃ பி எடுத்துப் போடணும் .
முதல் இரண்டு போஸும் வேண்டாம் .
விலங்கு தொழில் கால் வைத்த மாதிரி போஸ் மட்டும் போதும் .

அப்படியா எந்த விலங்குடா ?
காளையா ? ஜல்லிக்கட்டு காளையா ?
குதிரையா ? வரிக் குதிரையா ?

இல்லை இல்லை இல்லை

பின்ன ஒட்டகமா ஒட்டகை சிவிங்கியா ?

ஒட்டகை சிவிங்கி தோளில் கால் வைத்து நின்றால் பிரேமில் வருமா ?
லாஜிக்கலா திங் பண்ணு !

சரிடா நீயே சொல்லித் தொலை !

ELEPHANT ...JUST A BABY ELEPHANT !

WHAT SELFIE WITH JUST A BABY ELEPHANT
KEEPNG ITS LEGS ON MY SHOULDERS !
ஐயோ நான் செத்தேன் !

----கவின் சாரலன்


Close (X)

8 (4)
  

மேலே