என் கனவுக்கு கன்னிகை

இது என்ன நான் காண்பது
கனவா நினைவா தெரியலையே
வானத்து வெண்ணிலா எப்போது
தரையில் வந்தது அதுவும்
ஒரு பெண் உருவம் கொண்டு
மானிட பெண்ணுருவம் கொண்டு
மயக்கும் ஒளிகொண்டு
மூடி விரியும் இமைகளுக்குள்
மான் விழிகள் இரண்டு கொண்டு
மூங்கில் தோள்கள் கொண்டு
நீண்ட கைகள் இரண்டு
அதில் கொஞ்சும் நவரத்தின வளையல்கள்
மயக்கும் சின்ன மெலிய ஒலி எழுப்ப
சிவந்த கால்கள் இரண்டில் சலங்கைகள் கொஞ்ச
மஞ்சள் பொன்னாடைப் போர்த்திய
இளமையே பொன்னிலவாய் பெண்ணிலவாய்
என் கண்முன் களினடம் புரிந்து
செல்வோம் வா விண்ணுலகுத்துக்கு
அவ்வுலகில் காம நடனம் புரிந்திடலாம்
காலமெல்லாம் இன்புற்று வாழ்ந்திடலாம்
வா என் மனித காதலனே என்று என் கைகளை
தன மெல்லிய மென் கைகளால் கட்டிக்கொள்ள ..................
இந்நிலையில் என் கனவும் கலைந்திட
என் நிலவு கனவுக்கு கன்னிகையும்
எங்கோ ஓடி மறைந்து விட்டாள்
இப்போது என் வீட்டு திண்ணையில்
விழித்துக்கொண்ட நான் ...............


Close (X)

5 (5)
  

மேலே