நீர்

முன்னுரை:


உலகில் உயிராக பிறந்த ஒவ்வொரு உயிரினமும்
ஏதேனும் ஒன்றினை சார்ந்து இருக்கின்றன.
அதுப்போன்று மனிதனும் பலவற்றை சார்ந்து உள்ளனர்.
அதில் மனிதன் தன் வாழ்வில் "நீர்"
என்பதை தன் அடிப்படை தேவையாக சார்ந்து வாழ்கின்றான்.
மேலும் மனித வாழ்வில் நீரின் தேவைகள் மற்றும்
முக்கியத்துவம் எவ்வளவு அவசியம் என்பதை
இக்கட்டுரையில் காண்போம்.


மனிதனுக்கு நீரின் முக்கியத்துவம்



உரினங்களின் மத்தியில் சிரிக்கும் தன்மையை பெற்ற உயிர்
மனித உயிர் மட்டும் தான். அதனால் தான்
மனிதர்கள் எல்லாம் சிந்திக்க தவறிவிட்டார்கள். நீரைப் பற்றியும்
அதனை உருவாக்கும் மழையைப்
பற்றியும். அதனால் ஏற்பட்ட மாற்றமே
இன்று நீர் இன்றி மக்களுக்கு ஏற்பட்ட
குடிநீர் தட்டுப்பாடு.

மழைச்சாரலை தடுக்க குடைகள் ஏந்திய மக்களின்
கைகள் இன்று வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் குடைகள் ஏந்துகின்றார்கள்!. இதற்க்கு முக்கிய காரணம் நாம்
இயறக்கை வளங்களை அழித்து மட்டுமே.

இயற்க்கையை அழித்து வளங்களை அனுபவிக்கும்
நாம் அணைவரும் அதனை மீண்டும்
உருவாக்க முயற்ச்சிப்பது இல்லை.
அதனால் ஏற்பட்ட மாற்றமே இன்று
நம் உயிர்களை வாட்டி வதைக்கின்றது.

பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்கும்
மனிதர்கள் யாவரும் நாம் சுவாசிக்கும்
காற்றை சம்பாதிக்க விரும்புவதில்லை.
அதேபோன்று மழைநீரை சேமிக்க
மறுத்தவர்கள் இன்று குடிநீரை இழந்து
நிற்க்கிறார்கள். எனவே நீரை
உருவாக்கவும் அதனை சேமிக்கும்
முயற்ச்சிகளை நாம் அணைவரும்
எடுக்க வேண்டும்.


விவசாயிகளின் கணாணீர் :
ஏர் உழுத என் விவசாயிகள் எல்லாம்
ஏமாந்து நின்றார்கள் நீர் இன்றி.

ஒரு துளி மழைநீரை வேண்டி
ஒவ்வொரு நொடியும்
மரணத்தில் விழுகிறார்கள்
என் விவசாய தோழர்கள்...!

பருவ மாற்றத்தினை பார்த்து பார்த்து
எங்கள் மக்களின் பார்வைகளில்
கண்ணீரும் காய்ந்து போனது.

வரப்பு மேல் நீர் ஓடிக்கொண்டிருந்த
விவசாய நிலங்கள் எல்லாம் இன்று
வறட்சியான நிலமாக காட்சி அளிக்கின்று
நீர் இல்லாமல்.


முடிவுரை:

இந்நிலை இன்னும் நீண்டால்
கடல் நீரும் காணல் நீராக மாறும்
பச்சை நிற புல்வெளியும் பாலைவனமாக மாறும்

எனவே மனிதர்களான நாம் அணைவரும் சிறுது நேரம் ஒதுக்கி
மரம் வளர்ப்போம் மழைபெறுவோம் நீரை சேமிப்போம்

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-May-17, 2:20 pm)
Tanglish : neer
பார்வை : 16621

சிறந்த கட்டுரைகள்

மேலே